Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ!

மலையாளத் திரையுலகின் மதிப்புக்குரிய விருதுகளில் மிகமுக்கியமான விருதுவழங்கும் விழா ஏசியாநெட் பட விருதுவிழா. சமீபத்தில் நடந்துமுடிந்த இவ்விழாவிற்கு ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள ஸ்டார்களுக்கு விருதுகளையும் வழங்கினர். விழாநிகழ்வின் போது ஏற்பட்ட ஒரு சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரல் அடித்துவருகிறது.

விழாவில் விஜபி இருக்கையில் நிவின்பாலி உள்ளிட்ட பலர் நடுவில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த மலையாளி ரசிகர் ஒருவர் விக்ரமை தழுவி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தார். அந்த நேரத்தில் வந்த செக்யூரிட்டி அந்த ரசிகரை அதட்டி இழுத்துச் செல்லும் போது, செக்யூரிட்டியிடம் கோபப்பட்ட விகரம், அந்த ரசிகனை அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த நேரத்தில் அந்த ரசிகர் விக்ரமை முத்தமிட்டு அன்பைத் தெரிவிக்கும் போது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

மலையாள ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்வால் விக்ரமின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது.  அந்த நெகிழ்ச்சி வீடியோவைப் பார்க்க:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close