Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முண்டாசுப்பட்டி இயக்குநரின் அடுத்த படம்!

முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்குப் பிறகு அப்பட இயக்குநர் ராம்குமார் தனது அடுத்தபடத்தின் வேலைகளைத் துவங்கிவிட்டார். கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் எடுத்த படமே வெள்ளித்திரையில் முண்டாசுப்பட்டியாக வெளியாகி மெகா ஹிட்டானது.

80களின் துவக்கத்தில் நடக்கும் படமான முண்டாசுப்பட்டி நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை இயக்குநர் ராம் குமார் தனது முகநூலில் அறிவித்துள்ளார்.

அதில் , முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்குப் பிறகு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு க்ரைம் த்ரில்லர் கதைக்களம் கொண்ட எமது அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் நன்றி. எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் நடிகர் நடிகைகள், மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்