Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவிட்டரில் வருண்மணியன் கொடுத்த உறுதிமொழி

உதயம் NH4 படத்தை இயக்கிய மணிமாறனின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படமே புகழ். ஜெய், சுரபி மற்றும் கருணாஸ், R.J.பாலாஜி நடித்திருக்கும் இப்படம் மார்ச் 18ல் வெளியாகவிருக்கிறது.

வருண்மணியனின் தயாரிப்பு நிறுவனமான ரேடியன்ஸ் மீடியா தயாரிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகக் காத்திருக்கும் புகழ் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் வெளீயீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் வருண்மணியன் ட்விட்டரில், “ புகழ் மார்ச் 18ல் ரிலீஸ். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். நிச்சயம் அனைவரையும் எல்லா வழியிலும் இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்கு,விஜபி இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்