Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளையராஜா விழாவில் அமிதாப், ரஜினி?

  பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜா ஆயிரம் என்கிற பெயரில் இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா நடைபெறவிருக்கிறது.

இளையராஜா மியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வை தொடக்கத்தில் எதிர்த்த தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள்சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட அமைப்புகளும் இதில் பங்குகொண்டிருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணிநடிகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு அமிதாப்பச்சனையும் விழாவில் கலந்துகொள்ள அழைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரும் வர ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரஜினியும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

கமல் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். திட்டமிட்டபடி சென்னை வந்துவிட்டால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடும் என்று சொல்கிறார்கள்.

இவர்களோடு மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரையும் அழைத்திருக்கிறார்களாம்.

தெலுங்குத்திரையுலகம் மற்றும் கன்னடத் திரையுலகத்திலிருந்தும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமின்றி அமிதாப்பும் கலந்துகொண்டால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே இளையராஜாவுக்கு விழா எடுத்தது மாதிரி ஆகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்