Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வர் சுந்தரம் பெயரைக் காப்பாற்றுவாரா சந்தானம்?

“வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்”, “இனிமே இப்படித்தான்” படங்களைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்க உருவாகிவரும்  படம் “சர்வர் சுந்தரம்”.

படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது. படப்பிடிப்பின் முதல் காட்சியாக, சமையல்காரர் உடையில் பால் காய்ச்சுவதுபோன்ற காட்சியை படமாக்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் இயக்குநரான ஆனந்த் பால்கி, இதற்கு முன்னர் நிர்வாக சமையற் கலைஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகரின் பெயர் பிஜேஷ். இவர் நடிகர் நாகேஷின் மூத்த பேரன். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

ப்ளாஷ்பேக்:

நாகேஷ், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடிப்பில் 1964 வெளியான திரைப்படமே சர்வர் சுந்தரம். இப்படம் தமிழ்த் திரையுலகிலேயே வித்தியாசமான கதைத்தளத்துடன், ஹிட் படமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் தலைப்பையே சந்தானம் தேர்வு செய்திருக்கிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சந்தானத்தின்  இந்தப் படம் மாடர்ன் சர்வர் சுந்தரமாக இருக்குமா என்பது படம் வெளியானாலே தெரியும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்