Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறுதிச்சுற்று க்ளைமாக்ஸ் நேரத்தில் நடந்த நெகிழ்ச்சிக் கதை

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வசூல் மற்றும் பாராட்டு மழையில் நனைந்திருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் தெறி ஹிட். அதற்கு காரணம் ரித்திகா சிங்கின் க்யூட் நடிப்பே.

ரித்திகாவின் சின்சியரான நடிப்பே இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அதற்கு சான்றாக ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “ இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா" என்று நெகிழ்ந்திருக்கிறார் ரித்திகா.

இவரை இறுதிச்சுற்று படத்தில் சில காட்சிகளில் பார்த்திருக்கலாம். சில நாட்கள் அவருடன் இருந்தாலும் அந்த நாட்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று குறிப்பிட்டுள்ளார்”.

ரித்திகா பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் இறுதிச்சுற்று படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை விட நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளில் கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.