Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொன்ராம் படத்தில் லாரன்ஸூக்கு இரட்டைவேடங்கள்

  கடந்தஆண்டு காஞ்சனா2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ராகவாலாரன்ஸ் மொட்டசிவா கெட்டசிவா மற்றும் பைரவா ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இப்படங்களை முடித்ததும் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ஐங்கரன்நிறுவனம் தயாரிக்கும் புதியபடமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வருத்தப்படாதவாலிபர்சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அந்தப்படத்தை இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஐங்கரன் நிறுவனத்தின் படத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்தார்களாம்.

பொன்ராம் சொன்ன கதை லாரன்ஸ்க்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். அதோடு பொன்ராம் இயக்கிய இரண்டு படங்களுமே நல்லவெற்றியைப் பெற்றிருக்கின்றன. அவரோடு லாரன்ஸூம் சேர்ந்தால் அந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்று விநியோகஸ்தர்களும் சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் லாரன்ஸூக்கு இரட்டைவேடங்கள் என்று சொல்லப்படுகிறது. அவரே இயக்கிய படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தோற்றங்களில் அவர் நடித்திருக்கிறார் என்றாலும் இன்னொரு இயக்குநரின் படத்தில் இரட்டைவேடத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.    

 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)