Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் சினிமாவின் ரசிகனுக்கு இது முற்றிலும் புதிது?

எத்தனையோ கதைகள், எத்தனையோ கான்செப்ட்டுகளைக் கடந்து வந்துள்ளது தமிழ் சினிமா. இன்னும் சொல்ல வேண்டுமானால் இன்னும் எடுக்கப்படாத கதைகள் இருக்கா என்ற சந்தேகம் கூட எழும். ஆனாலும் நம் தமிழ் சினிமாவிலும் எடுக்கப்படாத ஒரு கான்செப்ட்டும் இருக்கத்தான் செய்கிறது அதுதான் ஓரினச் சேர்கையாளர்கள் பற்றிய படம். காமெடியாகவோ, அல்லது ஒரு சின்ன பகுதியாகவோ வேண்டுமானால் காண்பிக்கப்பட்டிருக்கும் ஓரினச் சேர்க்கையாளர் கதையை தற்போது முழுமையான கதையாக எடுக்க உள்ளனர்.

குறும்பட இயக்குநர் லோகேஷ் இந்தக் கதையை தமிழில் எடுக்கவே விருப்பப்பட்டுள்ளார், ஆனால் தேவையான தயாரிப்புச் செலவுக்கான பணம் கிடைத்திடாத நிலையில் படத்தை இந்தியில் எடுக்க முடிவெடுத்து வேலைகளை மேற்கொள்ள, அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் இவரது நான்கு நிமிடங்களே ஓடும் வீடியோ ஒன்றைப் பார்த்துவிட்டு படத்திற்கு பணம் கொடுக்க முன்வந்துள்ளார். மேலும் தனது கேரள பீச் ஹவுஸையும் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவு புரமோஷன் வீடியோவில் நடித்த அனுபமா குமார், இப்படத்தை தமிழில் எடுக்கும்படி கூறியதோடு, கிஷோர் ஜெயபிரகாஷ் இருவரையும் முன்னணி நடிகர்களாக நடிக்க வைக்கவும் உதவி செய்துள்ளாராம். தமிழில் சினிமா பல்வேறு கதைகள், பாத்திரங்களைக் கண்டு, நல்ல கதை,கதாபாத்திரங்களுக்கு வரவேற்புக் கொடுத்துள்ளது.

முதல்முறையாக இந்தக் கதையும் தமிழுக்கு அறிமுகமாகிறது பார்ப்போம். முன்பை விட ரசிகர்கள் இப்போது படங்களை உலகத் தரத்தில் பார்க்கின்றனர் என்பதால் இந்த ஓரினச் சேர்க்கைப் படமும் வரவேற்புப் பெறுமா? அல்லது, கடும் விமர்சனங்களைச் சந்திக்கவிருக்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.