Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவர்தான் சூப்பர்ஸ்டார் - விஜய் ஆண்டனி சொல்வது யாரை?

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பிச்சைக்காரன் படம் மார்ச் நான்காம் தேதி வெளியாகிறது . பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடித்திருக்கிறார் , சட்னா டைட்டஸ் இந்தப் படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர் . அந்நிகழ்வில் இயக்குநர் சசி பேசும்போது " படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன் . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . எனினும் அண்மையில் எனக்குக் கொஞ்சம் பதட்டம் . ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது . படத்தைப் பார்த்தார்கள் . மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன் .

என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை விடவும் உற்சாக வரவேற்பு . அப்போதுதான் எனக்கு நிம்மதி . படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வாங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும் . இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல . சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை . இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே இல்லை . சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார் " என்றார் விஜய் ஆண்டனி பேசும்போது " என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான், அவர் இயக்கத்தில் படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் . அவர் சொன்ன கதை இது . கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுது விட்டேன். இந்தப் படத்தைத் தயாரித்து நடித்தற்காகப் பெருமைப் படுகிறேன் இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னைப் பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்திலிருந்து படம் பிடித்தார்கள் .

சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்குப் பணம் கொடுத்து நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது . மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் .. இப்படிப் பல நிகழ்வுகள் ...நாம் அவர்களை மிகச் சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம் ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது .

நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன் . இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் . இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?'ன்னு கேட்டு இருப்பா ங்க . ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினார் .இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் " என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!