Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதியுடன் இணையும் இறுதிச்சுற்று நாயகி

'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து குற்றமே தண்டனை படத்தை இயக்கியிருக்கும் மணிகண்டன், அப்படம் வெளியாகும் முன்பே, விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் 'ஆண்டவன் கட்டளை' படத்தைத் தொடங்கவிருக்கிறார்.

இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் இறுதிச்சுற்று ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார் ரித்திகாசிங். அவர்கள் எல்லோரையும் முந்திக்கொண்டுவிட்டார் மணிகண்டன். மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை மணிகண்டன் முழுமையாகத் தயார் செய்துவிட்டாராம். அதனால் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இயக்குநர் மணிகண்டனும் விஜய்சேதுபதியும் இணையும் படமென்பதாலேயே பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றிருக்கும் ஆண்டவன்கட்டளை படத்தில் இப்போது ரித்திகாவும் இணைந்திருப்பது படத்துக்குப் பெரும் பலம் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close