Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடைசியில என்னையும் ட்விட்டர் பக்கம் வர வைச்சிட்டீங்களே- புலம்பும் சசிகுமார்

இயக்குநர், நடிகர் சசிகுமார், சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இப்போது அவரும் வந்துவிட்டார்.  அவர் போட்டிருக்கும் பதிவிலிருந்து...

ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் இப்போதான் முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறேன். என்னைப் பற்றிப் பெருமிதம் பேசவோ, பாராட்டு தேடிக்கொள்ளவோ நிச்சயமாக நான் வரலை. அப்படி நினைத்திருந்தால் முன்னாடியே வந்திருப்பேன்.

இத்தனை நாள் நான்தான் வரலையே தவிர, என்னோட பேரில் நிறைய பேர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி இஷ்டத்துக்கு ஏதேதோ எழுதியபடி இருந்தாங்க. இதுக்கு முற்றுப்புள்ளி வைக்க நானே களத்துக்கு வரவேண்டியதா ஆகிடிச்சு. இது மட்டுமில்லாமல், சக மனிதர்களில் ஒருவனாக என் பார்வையைப் பதிவு செய்யலாமேங்கிற ஆர்வமும், சமீபகால நிகழ்வுகள் மீதான அக்கறையும்தான் என்னையும் எழுதத் தூண்டியது.

அதுக்காக 'சாப்பிட்டேன்', 'தூங்கினேன்'னு வெறுமனே சுயபுராணம் பாடப் போறது கிடையாது; ஒருத்தரோட இறப்புக்குகூட வருத்தமா ரெண்டு வார்த்தைகளையும் கண்ணீரோடு ரெண்டு பொம்மைங்களையும் பதிவா போட்டு, 'நானும் வருத்தப்பட்டேன்'னு சொல்லப்போறதும் கிடையாது. நல்லதுக்குப் போக முடியலைன்னாகூட இறப்புக்கு ஓடோடிப்போய் நிற்கிறதுதுதானே நம்ம வழக்கம். முடிஞ்சா நேர்லபோய் அனுதாபமா நிற்கணும்; இல்லைன்னா சும்மா இருந்திடனும். .

என்னோட பார்வை, என் படம், சந்தோசம், சங்கடம்... இப்படி மனசுல பட்டதை அப்படியே இறக்கி வைக்கிற எண்ணம் தாண்டி வேறெந்த நோக்கமும் இந்த வருகைக்குப் பின்னால இல்லை. கடைசியில என்னையும் ட்விட்டர் பக்கம் வர வைச்சிட்டீங்களே  என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்