Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜித்துஜில்லாடி கலர்கண்ணாடி - தெறிக்கும் பாடல் வரிகள், உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தெறி’. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இந்தப் படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீஸர் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியாகி இதுவரை 91 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியாக உள்ளது என ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடலின் சில வரிகளையும் பகிர்ந்துள்ளார்.

“ ஜித்துஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா

டாலடிக்கும் கலர் கண்ணாடி!”

“தொப்பியில சிங்கத்த பாரேன் ,

தோளுல ஸ்டார வாங்கும் போலீஸுக் காரன்!”

என்ற இரண்டு வரிகளும் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!