Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா வந்துவிட்டார், ரஜினி வருவாரா?

  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  சென்னையில் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில்...

 தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக்காட்சிகள் வெளிவரவுள்ளன. நடிகை நயன்தாரா நடித்துள்ள விழிப்புணர்வு படம் விரைவில் வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடமும் விழிப்புணர்வு படம் நடிக்க அழைப்பு விடுத்துள்ளோம். கிரிக்கெட் வீரர் அஸ்வின் இலவசமாக நடித்தார். விழிப்புணர்வு விளம்பர வீடியோ படப்பிடிப்புக்காக ரூ.10 லட்சம், சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக ரூ.10 லட்சம், எப்.எம். ரேடியோ மூலம் ஒலிபரப்புவதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளோம்.

இந்தத் தேர்தலுக்கான அனைத்து ஓட்டு எந்திரங்களும் வந்துவிட்டன. 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்காம் மூலமாகவும், 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வீடியோ படப்பிடிப்பு மூலமாகவும் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் பாதியளவு வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக்குள் வந்துவிடும்" என்று கூறினார்.

இந்தப்பேட்டியிலிருந்து, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படத்தில் நயன்தாரா நடித்துவிட்டார் என்று தெரிகிறது. ரஜினிகாந்த் இந்த அழைப்பை ஏற்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்