Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரேமம் படத்துக்கு விருது இல்லையா? முருகதாஸ் விமர்சனம்

 விருதுகள் என்றாலே சர்ச்சைகளும் வருவது இயல்புதானே. 2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. அதுவும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.

 சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் கேரள திரை உலகில் பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேரள அரசாங்கத்தை விமர்சனம்  செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
ரசிகர்கள் மட்டுமின்றி இப்போது இயக்குநர் முருகதாஸும் அதை விமர்சித்துள்ளார். பிரேமம் படத்துக்கு விருது கொடுக்கவில்லை. இது அழகல்ல என்று டிவிட்டரில் சொல்லியிருக்கிறார்.அவருடைய கருத்துக்குப் பலர் வரவேற்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close