Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலி - 2 ரிலீஸ் தேதி வெளியானது! #‎WhyDidKatappaKillBaahubali‬

எஸ். எஸ். ராஜ மெளலி இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளத்தோடு வந்து பல விருதுகளை தமிழ், தெலுங்கு மொழிகளில்  அள்ளிச் சென்றது.

இந்தப் படம் வந்து, ’கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்று பலரையும் கேள்வி கேட்க வைத்தது. இரண்டாம் பாகத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க.. பாகுபலி படத்தின் VFX டீமான ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் சித்தார்த் இன்று முகநூலில் ஏப்ரல் 14 -  2017 அன்று பாகுபலி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.

 

’என்னது... இன்னும் ஒரு வருஷமாகுமா முன்கூட்டியே வராதா’ என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டாலும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதும், மாறிக்கொண்டிருப்பதும் திரைத்துறைக்கொன்றும் புதிதல்ல.

ஆகவே.. வி ஆர் வெய்ட்டிங் பாஸ்!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்