Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்

 ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா? என்கிற கேள்வி இருந்தது.

ஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

 அந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
 
இது தொடர்பாகக் கடந்த சில நாட்களாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.  பேச்சுவார்த்தைகள்  சுமுகமாக முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக டி.ராஜேந்தர் கூறியதாவது....

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது.  கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர் எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது எனக்கு உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.

புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள். போக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close