Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இசைக்கு சேவகம் செய்பவன் நீயல்லவா... வித்யாசாகர்!

நீங்கள் 1100 மொபைல் அறிமுகமான காலத்தில் காலர் டியூன் வைத்திருந்தவர் என்றால், நிச்சயம் ஒரு முறையேனும், இவரது பாடல்கள் உங்கள் மொபைலின் காலர் டியூனாக இருந்திருக்கும். மில்லினியம் ஆண்டு தொடக்கத்தில் காதலித்தவர் என்றால், இவரது பாடல்களை வாக் மேனில் பதிவு செய்து ஃபீல் செய்திருப்பீர்கள். கமல், ரஜினி படங்களின் பத்து பாடல்களை பட்டியலிடுங்கள் என்றால், நிச்சயம்  இவர் இசையமைத்த பாடல்கள் அந்த பட்டியலில் இருக்கும்...? ஆம் காலம் தந்த அற்புத கலைஞன் ‘வித்யாசாகர்’. 

சமூகத்தில் ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்துவது வன்மமானது, அது திரை இசைக்கும் பொருந்தும். திரைப் பாடல்களில், இசை மட்டும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது, வரிகளும் முக்கியம் என்று நினைத்து சமநிலையை பேணி வரும் மகா கலைஞன் இவர்.

வசூலை வாரிக்குவிக்காத பல படங்கள் இன்னும் நம்மால் நினைக்கப்படுகிறதென்றால், அதற்கு இவரது இசையும் முக்கிய காரணம். தொண்ணூறுகளின் இறுதியில் காதலித்தவர்களுக்கு, ‘நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா... இந்தப் பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா...’, என்ற பாடல் தேசிய கீதமாகவே இருந்தது.

ராஜாவும், ரஹ்மானும் கோலாச்சுகின்ற தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர்கள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வது மிகக் கடினம். அதுவும், நமக்கு அனைத்தும் அளவுக்கு மீறி கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில், பாடல்கள் வந்த வேகத்தில், நமது நினைவுகளிலிருந்து மறைந்து விடுகிறது. ஆனால், மில்லினியத்தில் பருவம் அடைந்தவர்கள் இன்றும் ‘காதல் பிசாசே, காதல் பிசாசே...’ பாடலை முணுமுணுத்து கொண்டிருப்பார்கள். மெலடியின் காதலர்கள் என்றால், ‘பொய் சொல்ல கூடாது என் காதலி... பொய் சொன்னாலும்... நீயே என் காதலி...’ என்ற பாடல் தங்கள் விருப்ப பட்டியலில் இருக்கும்.

தஞ்சையில் ஒரு முறை பாடலாசிரியர் யுகபாரதி, வித்யாசாகர் பற்றி , “வித்யாசாகர்... பாடலாசிரியர்களிடமிருந்து பாடல்களை வாங்குவதில் வல்லவர். வரிகளில் சின்ன சமரசம் கூட செய்து கொள்ளமாட்டார். மீரா ஜாஸ்மீனை நினைத்து காதல் பிசாசை எழுதவில்லை... உண்மையில் வித்யாசாகர் சாரை நினைத்துதான்  எழுதினேன்...” என்றார். ஆம் இவருக்கு இசை மட்டுமல்ல... பாடல் வரிகளும் அவ்வளவு முக்கியம்.

வரிகளுக்கு முக்கியம் தந்த அதே வேளையில், அர்த்தம் புரியாத ஒரு பாடலை உலகமே முணுமுணுக்க வைத்தவர் அவர். ஆம். “ரா .. ரா .. சரசுக்கு ரா ரா ..” பாடலைதான் சொல்கிறேன். “ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ... ஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ...” என்ற இந்த தெலுங்கு பாடல் வரிகளுக்கான அர்த்தம் நம்மில் பலருக்கு இப்போது தெரியாது. ஆனால், சாகர் செய்த மாயாஜாலத்தால், அந்த பாடல் ஓடும் போதெல்லாம், நம்மையும் அறியாமல் நம் இதழ்கள் முணுமுணுக்கிறது.

கொண்டாட்டமான பாடல்கள் மட்டும் தந்தவர் அல்ல சாகர்.  “யார் யார் சிவம்.... நீ நான் சிவம்...” என்று பாடலை கமல் பாட துவங்கும் போது, நம்மில் பலருக்கு கண்கள் கலங்கி இருக்கும்.

இவர் இசை அமைத்த மொழி படத்தில், “காற்றின் மொழி ஒலியா இசையா...” என்று துவங்கும் ஒரு பாடல் இருக்கும். இசைதான் என்று காலம் கூறியதென்றால், அந்த இசையின் அனைத்து பரிமாணங்களிலும் நீங்கள் நிரம்பி இருப்பீர்கள்.

வாழ்த்துகள் வித்யாசாகர்.

(இன்று இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்த நாள்)

- மு.நியாஸ் அகமது

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close