Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்புவுடன் இணைவதில் என்ன தப்பு? அனிருத் கேள்வி

பீப் பாடல் சர்ச்சை குறித்து பிரச்னைகள் வெடித்த தருணம் அனிருத்  தனது கனடா இசை நிகழ்ச்சிக்காக விமானத்தில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பரிடம், 2015 எவ்வித சர்ச்சையுமின்றி அமைதியாக கடத்திவிட்டேன். எனக் கூறியுள்ளார்,  கனடா விமான நிலையத்தில் மீண்டும் மொபைலை ஆன் செய்தபோது அவ்வளவு எஸ்.எம்.எஸ்கள் அனிருத் மொபைலை நிறைத்திருந்தன.

இப்பவும் தன்னால் அந்த நிமிடங்களை மறக்க முடியாது எனக் கூறும் அனிருத்திடம் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா எனக் கேட்டபோது அவர் கூறிய பதில் இதுதான். ” அது ஒரு சின்ன விஷயம், தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனக்கும் அந்தப் பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்திலும் கடிதம் கொடுத்துவிட்டேன்.

இதனால் ஏன் நான் சிம்வுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன். உண்மையைச் சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் வேலை செய்தால்  என்ன தரப்போகிறோம் என்பதில் கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார் அனிருத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)