Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆமா சார், சோம்பேறிங்க சேர்ந்து எடுத்த படம்தான் பிரேமம் - ஜூரிகளுக்குக் கலாய் கடிதம்

பிரேமம், மலையாள மக்களை மட்டுமல்ல மொழி தெரியாத தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களையும் இன்னமும் ஈர்த்துக்கொண்டிருக்கும் படம்... இல்லை இல்லை...மாயாஜாலம்!

தமிழக திரையரங்குகளில் மட்டுமே 200 நாட்களைக்கடந்து ஓடிய அந்தப் படத்திற்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட கேரள அரசின் மாநில விருதுகள் பட்டியலில் ஒரு பிரிவில் கூட இடம் கிடைக்கவில்லை. விருது வழங்கப்படாததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், "முதல் படமான நேரம் படத்தை அவ்வளவு கச்சிதமாகக் கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்தை ஒரு சோம்பேறித்தனமான அணுமுறையுடன் கையாண்டிருக்கிறார்” என ஜூரியின் சேர்மன் விளக்கம் கொடுக்க பற்றிக் கொண்டது ப்ரேமம் ரசிகர் பட்டாளத்துக்கு. 

 


 

இந்நிலையில், ஜூரிகளுக்கு பதிலடி தரும் விதமாக, அந்தப்படத்தின் சவுண்ட் டிசைனரான விஷ்ணு கோவிந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ‘செம கலாய்’ பதிவை போஸ்ட் செய்துள்ளார். "நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் சார். 'பிரேமம்' எல்லாம் ஒரு படமா...? நாங்க சில சோம்பேறிப் பசங்க சேர்ந்து இரண்டு வருஷமாக சோம்பேறித்தனமா எடுத்த படம்தான் இது. அதுலயும், படத்தில நடிச்சவங்கல்லாம் ஆக்டர்ஸா?அவங்க பயங்கர சோம்பேறித்தனமா நடிச்சதால, அது நடிப்பா இல்லை உண்மையான்னு ஆடியன்சே கன்ஃப்யூஸ் ஆகிட்டாங்க. உருவாக்கம் சரியில்லன்னு எப்டி சார் இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சீங்க? இந்த டெக்னீஷியன்சும், கேமராமேனும் செஞ்ச சோம்பேறித்தனமான வேலைல, படத்த கேமராலதான் ஷூட் பண்ணினாங்களான்னு உங்களுக்கே கன்ஃப்யூஸ் ஆகிருச்சு.

படத்துல தேவையில்லாத இடத்துல மியூசிக் கிடையாது, அப்படின்னா ம்யூசிக் டைரக்டர் எவ்ளோ பெரிய சோம்பேறியா இருந்திருப்பாரு. எடிட்டிங்காய்யா அது....? சுத்த சோம்பேறித்தனம். படத்தோட சவுண்டையும் பாருங்க.... படத்தப் பாக்குறப்போ அவ்ளோ ரியலிஸ்டிக்கா வந்துருக்கு. ரொம்பவே மோசம். நாங்கெல்லாம் பரவால்ல, இதுக்கெல்லாம் லீடராக இருந்த இயக்குநர்தான் நம்பர் 1 சோம்பேறி. அடப் போங்கய்யா படம் வெறும் 250 நாள்தான் ஓடியிருக்கு.

ஆடியன்ஸ் பயங்கர சோம்பேறியா இருக்கிறதால தான் திரும்பத் திரும்ப தியேட்டருக்குப் போய்ப் பாக்குறாங்க. அதுவும், சென்சார் காப்பியே நெட்ல ரிலீஸான பிறகும் தியேட்டருக்குப் போய்ப் பாக்கிறாங்கன்னா எவ்வளவு சோம்பேறித்தனம் பாருங்க. தமிழ் தெலுங்கில் உள்ள பல முன்னணி இயக்குநர்கள் சோம்பேறித்தனமாகப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆமா, அல்போன்ஸ் நாம இப்படி சோம்பேறியா இருக்கலாமா...?ஆமா, இதுதான் சோம்பேறித்தனம்னா அதைத் தொடர்ந்தும் செய்வோம். மக்கள் கொண்டாடும் இந்த சோம்பேறித்தனத்தை தொடர்ந்தும் செய்வோம். தொடர்ந்தும் சோம்பேறித்தனமான படங்களையே தருவோம். கூடவே நின்று சப்போர்ட் பண்ற எல்லா சோம்பேறி ரசிகர்களுக்கு மிக்க நன்றி."

-சுசித்ரா சீதாராமன் -

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்