Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா? எதிர்பார்ப்புகளை எகிற வைத்த 24 டீஸர் விமர்சனம்!

 தெறி பட டீஸர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்க போட்டியாக களமிறங்கியுள்ளது சூர்யாவின் "24" பட டீஸர் . நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருக்கும் இப்படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முதலும் முக்கிய காரணமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. 

விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் உருவாக்கியுள்ள இப்படம் ஒரு அறிவியல் அடிப்படையான கதை. ஒரு வாட்ச் சத்தம், அப்படியே அதிகமாகி டெம்போவை ஏற்றிய பாணியென டீஸர் பலரையும் பேச வைத்துள்ளது.

 
 
 
 

டெடிகேஷனுக்குப் பெயர் போன சூரியாவின் பெர்ஃபாமென்ஸ் குறித்து சொல்லவேண்டியதே இல்லை. ஸ்டைலிஷ் லுக், வில்லன், அறியாத மனிதர், எனப் பல கெட்டப்களில் காட்சியளிக்கிறார் சூர்யா. ஒரு இடத்தில் வித்யாச நடை, படம் எப்போது ரிலீஸ் என்ற கேள்வியை கேட்க வைத்து விடுகிறது. சமந்தா, நித்யா மேனன் ஆளுக்கொரு காட்சிகளாக வந்தாலும் இருவருமே ஒருவித பரபரப்பு, பயமென நடிகைகளின் கேரக்டர்களும் முக்கியத்துவத்துடன் இருப்பதை உணர்த்துகிறது.

ஒரே கருவில் உதித்தோம்

சில நிமிட இடைவெளியில் ஜனித்தோம்

ஓர் உருக் கொண்டோம்”

என்ற ஆரம்ப வசனமே நம்மை எழுந்து உட்கார வைக்கிறது. டிரெயின் நொடிப்பொழுதில் கடக்கும் தருவாயில் கூட 3 என்ற பெட்டி எண்ணை தலைகீழாக கண்ணாடி பிம்பம் போல் காட்டியிருப்பதைப் பார்த்தால் இயக்குநர் விக்ரம் குமார் லாஜிக் பிரச்னை கூட படத்திற்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

அல்ஜீப்ரா ஃபார்முலாக்கள், வாட்ச் சத்தம், ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி என டீஸர் என்னப்பா அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா பாணியில் உள்ளது. கடைசி வசனமான “ ஐ ஹேவ் கம் ஃபார் மை வாட்ச்” என்பதும், ஆரம்பத்தில் வரும் வாட்ச் சத்தமும் காலச்சக்கரம் சார்ந்த படம் எனக் காட்டினாலும் ஏகப்பட்ட சூர்யாக்கள் வருவதும், வித்யாசமான வசனங்களுமென இது வெறும் டைம் டிராவல் படம் மட்டுமல்ல என்பதையும் காட்டுகிறது. மேலும் சூர்யா ஆறு விரல்களோடு வேறு காட்டப்படுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேல் டீஸரின் எடிட்டிங் அவ்வளவு நுணுக்கமான ஒன்றாக பாராட்டவே தோன்றுகிறது. ”ஆத்ரேயா.... ஆத்ரேயா டா” என தமிழில் வந்தாலும் ஆங்கிலத்தில் இரண்டாம் ஆத்ரேயா சொல்லுமிடத்தில் “ ஐ யம் ஆத்ரேயா” என சப் டைட்டில் வருவது அவரது கேரக்டர் பெயராக இருப்பதையும் மறைமுகமாக காட்டுகிறது. டீஸர் இதுவரை 8 லட்சத்தைக் கடந்துள்ளது சூர்யா படங்களிலேயே இதுதான் முதல் முறை என்றும் கூட சொல்லலாம். அதிலேயே இப்படத்தின் எதிர்பார்ப்பும் புரிகிறது.

ஒரு டீஸரின் முக்கிய வேலை டிரெய்லரைக் காணத் தூண்டுவதுதான், அந்த வேலையை இந்த 24 டீஸர் சரியாகச் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் படம் 24 மணிநேரமும் பேச வைக்குமா என்பதை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)