Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”50 ரூபாயில் படம் பார்க்கலாம்” ஆர்.கே.செல்வமணி புது யோசனை!

யானை மேல் குதிரை சவாரி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். அதில் ஆர்.கே.செல்வமணி பேசும் போது,

இப்போதெல்லாம் திரையரங்கங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறிவிட்டன. முன்பெல்லாம் ஏ,பி,சி என டிக்கெட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இப்போதெல்லாம் நிலையே வேறு. ஏ, ஏ+,ஏ++ என இப்படி எல்லா வசதிகளும் தியேட்டருக்குள்ளேயே வந்துவிட்டது. ஆனால் எவ்வளவு வசதிகள் வருகிறதோ அவ்வளவு செலவுகள் நாம் செய்தாக வேண்டியுள்ளது. அரசாங்கம் ஒரு திட்டம் கொண்டு வந்தது. அதை சிலர் எதிர்த்ததால் முடங்கிப் போனது. ஆனால் யோசித்துப் பார்த்தால் எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வருவதில்லை. ஒரு பெரிய பட்ஜெட் படமென்றால் மட்டுமே மக்கள் ஆர்வமாக பெரிய திரையரங்குகளைத் தேடி வருகிறார்கள். மேலும் ஒரு படம் பார்க்க எல்லா செலவுகளும் சேர்த்து 1000 ரூபாய்களைத் தொட்டு விடுகிறது.

இதனால் தான் சின்ன பட்ஜெட் படங்கள் அங்கே திரையிடப்படுவதும் இல்லை, மக்களும் ஆர்வம் காட்டுவதுமில்லை. குறைந்த கட்டணத்தில் சிறிய ஊர்களில் திரையிட்டால் மக்கள் கண்டிப்பாக சின்ன பட்ஜெட் படங்களையும் பார்ப்பார்கள். அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும் நஷ்டத்திலிருந்து விடுபடுவார்கள். இதற்கு 100 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய சிறிய திரையரங்குகளை உருவாக்கி 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரலாம். இதனால் சினிமா தொழில் நஷ்டம் இல்லாமல் பாதுக்காக்கப்படும். திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள் எனச் சொல்லுவது ஒரு ரகம் என்றால் அவர்களை திரைகளில் பார்க்க வைக்க இந்த முயற்சி எடுப்பதும் அவசியமான ஒன்று எனக் கூறினார் ஆர்.கே.செல்வமணி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்