Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சந்திரமுகி கூட்டணி - ரஜினி புது முடிவு?

 ரஜினி நடித்த கபாலி படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தேவைப்பட்டால் இன்னும் ஒரிருநாட்கள் படப்பிடிப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி இப்போது ஷங்கரின் எந்திரனின் இரண்டாம்பாகமான 2ஓ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ரஜினி இன்னொரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று இப்போதே செய்தி வரத்தொடங்கிவிட்டது.

2ஓ படத்தை முடித்தவுடன் சந்திரமுகி அணியுடன் மீண்டும் இணையவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் அவர் இன்னொரு படம் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படத்தைத்தான் தமிழில் ரஜினியை வைத்து எடுக்கவிருப்பதாகவும் பேச்சு இருக்கிறது. இதுபற்றி விசாரித்தால், அண்மையில் சிவலிங்கா படத்தை ரஜினிக்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதனால் இப்படிப்பட்ட பேச்சுகள் வந்துவிட்டன என்கிறார்கள்.

அது மட்டுமின்றி ரஜினிக்கு இப்போது இரண்டு படங்களின் வேலைகளும் இருப்பதால் அதற்கடுத்த படம் பற்றி இப்போது முடிவெடுக்கமாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனாலும் நெருப்பில்லாமல் புகையவில்லை என்றும் சொல்லப்படுகிறது.    

 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்