Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தல் பிரச்சாரம், மீண்டும் ரஜினிக்கு அழைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்களிக்கும் உரிமை, ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என தேர்தல் கமிஷன் பல விழிப்புணர்வு விளம்பரங்களை முழுமூச்சாக உருவாக்கி வருகிறது. இந்த விழிப்புணர்வு விளம்பரப் படங்களில் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பது வழக்கம். அதே போல் இதற்கு சம்பளம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது.

இந்தத் தேர்தலிலும் தற்போது ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா உள்ளிட்டோருக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. இதில் ரஜினி தரப்பிலிருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை. சூர்யா தான் ஒப்பந்தமான விளம்பரப் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்ட நிலையில் நயன்தாரா, கமல் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் ரஜினிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும் இன்னமும் பதில் வந்தபாடில்லை. இவர்கள் மட்டுமின்றி இன்னும் சில நடிகர்களுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close