Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாராவுக்குப் பதிலாக அடா ஷர்மா! சிம்பு அதிரடி

  சிம்பு நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் இதுநம்மஆளு படத்தை மார்ச் 25 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது திட்டமிட்டபடி 25 ஆம் தேதி படம் வெளியாவது சந்தேகமே என்கிறார்கள்.

ஏனெனில் படத்தில் இன்னும் இரண்டுபாடல்களைப் படமாக்கவேண்டியிருக்கிறதாம். நயன்தாரா வரவேமுடியாது என்று சொல்லிவிட்டதால் வேறொரு முன்னணி நடிகையை வைத்து அப்பாடலைப் படமாக்க முயற்சு செய்துகொண்டிருந்தார்கள். ஸ்ருதிஹாசன் அல்லது ஹன்சிகா ஆகியோரை ஒரு பாடலில் ஆடக்கேட்டதாகச் சொல்லப்பட்டது. அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை போலும்.

இப்போது இந்தி மற்றும் தெலுங்கில் அறியப்பட்ட நடிகையாக இருக்கும் அடாசர்மாவை ஒரு பாடலில் ஆட வைக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பாடலில் ஆண்ட்ரியா நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே இரண்டுமணிநேரப்படம் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவ்விரு பாடல்களையும் ஒரு வாரத்தில் படமாக்கிவிட்டால் அவற்றையும் இணைத்து உடனே படம் தயாராகிவிடுமாம்.

அப்படியானால் 25 ஆம் தேதி படம் வெளியாகிவிடுமா? அதில் சந்தேகம்தான் என்கிறார்கள். இந்த மாதத்தை விட்டால் மே மாதம்தான் படத்தை வெளியிட முடியும் என்று சொல்கிறார்கள்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்