Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையத்தில் பரவும் ராகவா லாரன்ஸின் புதிய கெட்டப்

ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காஞ்சனா – 2 மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “மொட்ட சிவா கெட்ட சிவா”

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, வேந்தர் மூவீஸ் மதன் வெளியிடவிருக்கும் இப்படத்தில் ராகவாலாரன்ஸூடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி மற்றும் கோவைசரளா, ராணா, மதன்பாப், தம்பிராமையா, மயில்சாமி, மனோபாலா என்று காமெடி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக, அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படங்களைத் தொடர்ந்தே ராகவா இயக்கி நடிக்கும் பைரவா, நாகா உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close