Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜீத் படத்தைச் சுற்றும் வதந்திகள்

  அஜீத்தின் அடுத்தபடத்தை வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கிறது. இது உறுதிதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்கிறார்கள்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் அது பற்றியும் பல்வேறு விதமான பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன. சத்யஜோதி நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு இல்லை, வேறொரு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றொரு பேச்சு இருக்கிறது.

அது மட்டுமின்றி, தன்னுடைய அடுத்தபடத்தின் இயக்குநர் யார் என்பதை அஜீத் இன்னும் முடிவு செய்யவில்லை, சிவாவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார் அவர் மட்டுமின்றி விஷ்ணுவர்தன் மற்றும் இரண்டு இயக்குநர்களும் அஜித்தின் பரிசீலனையில் இருக்கிறார்கள் என்றும் பேச்சு இருக்கிறது.

ஏன் இப்படிச் செய்திகள் வருகின்றன? என்றால், திரையுலகைப் பொறுத்தவரை எவ்வளவோ பேச்சுகள் அடிபடலாம் ஆனாலும் பணம் கொடுத்து ஒருவரை ஒப்பந்தம் செய்தால்தான் உறுதி என்பார்கள். இதுவரை அஜித்துக்கு எந்த நிறுவனத்திலிருந்தும் முன்தொகை கொடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே இப்படிப்பட்ட பேச்சுகள் உலா வந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பல்வேறு யூகங்களுக்குப் பிறகு விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று சொல்லிவிட்ட மாதிரி அஜீத் படஅறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வந்தால்தான் நிச்சயம் என்கிறார்கள்.     

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்