Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் 60; விஜய்க்கு வில்லன் யார்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் தெறி, இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்கவிருக்கிறார்.

விஜய்யை வைத்து “அழகிய தமிழ் மகன்” படத்தை இயக்கியவர் மற்றும் கில்லி படத்திற்கு வசனம் எழுதியவரே பரதன். விஜய் 60யை வரும் மே முதல் வாரம் தொடங்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இதற்கான முதல்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ், காமெடிக்கு சதீஷ், இசையமைப்பாளராக சந்தோஷ்நாராயணன், எடிட்டராக பிரவீன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இப்படத்தில்  யார் வில்லன் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருந்துவந்தது. 

இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக தெலுங்குநடிகர் ஜெகபதி பாபுயை ஓகே செய்துள்ளது படக்குழு. ஜெகபதி பாபு இறுதியாக ரஜினி படமான லிங்காவில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close