Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத், ராதாரவி இடைநீக்கம்- நடிகர்சங்கம் அதிரடி?

நடிகர்சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல விசயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றில், நடிகர்சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகைசந்திரசேகர் ஆகியோரை நடிகர்சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யும் முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நடிகர்சங்க அறக்கட்டளை தொடர்பான கணக்குகளைச் சரியாக ஒப்படைக்காத காரணத்தால் இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி சமுகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இது தொடர்பாக நடிகர்சங்கத்தலைவர் நாசரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை, இப்போது ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறோம், செயற்குழுக்கூட்டம் தொடர்பான அறிக்கை நாளை வெளிவரும் என்று தெரிவித்தார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close