Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு மாதம் முன்பே டிக்கெட்டுகள் விற்பனை...விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமா? லாபமா?

நேற்று சத்யம் மல்டிப்ளக்ஸ் திரையரங்கின் அதிகாரப்பூர்வத் தளத்தை எதார்த்தமாக ஓபன் செய்த அனைவருக்கும் பேரின்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ப்ரீ புக்கிங்கில் வழக்கம் போல இந்த வார படங்களின் அணிவகுப்பைக் காண்பதற்காக தேடிய போது எதார்த்தமாகவே அது கண்ணில் பட்டது. ப்ரீ புக்கிங் லிஸ்டில் தெறி படம்.

ஒன்றுக்கு இரண்டு முறை கண்களைக் கசக்கி நாம் நிதானிப்பதற்குள் மடமடவென டிக்கெட்டுகள் புக்காகிக் கொண்டிருந்தன. ‘அடேய் அடேய்.. இருங்கடா நாங்களும் போட்டுக்கறோம்’ என கொஞ்சம் முயற்சித்தோம்.

எப்படியோ கஜினி முகம்மது பாணியில் போரெடுத்து புக்கிங் செய்தால் நமக்கு கிடைத்தது டிக்கெட் புக்கிங் டிடெய்ல்.

அதாகப்பட்டது “அன்பு வாடிக்கையாளரே, தெறி படம் ரிலீஸ் சம்பவம் நடக்கும் ஏப்ரல் 14ம் தேதி உங்களது டிக்கெட்டுகள் வெற்றிகரமாக ப்ரீ புக்கிங் வரிசையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த டிக்கெட்டுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தேதி, இந்த புக்கிங் ஐடியில் இந்த வேளைக் காட்சி..” என்றெல்லாம் வந்ததும் நமக்கும் தலைகால் புரியாமல் ஊரே சொல்லிக்கொண்டிருந்தோம்.

அப்போது தான் நண்பர் ஒருவர் கேட்டார்.

“உங்கள் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதா?”

நமக்கும் ஆறாம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. கஸ்டமர் கேர் நம்பரைத் தேடிப்பிடித்தால்,

"நீங்கள் பல்க் புக்கிங் செய்ய மட்டுமே இந்த எண்" என்றார் ஒருவர். அடுத்து ஒரு எண்ணுக்கு போன் செய்த போது வழக்கமான கணிணி குரல்

“ வெல்கம் டூ ஸ்பைஸ் சினிமாஸ்” என பிறகு ஒரு ரிங் அடித்தது ஒரு மென்மையான குரலில் குட் மார்னிங் , திஸ் ஈஸ் ஸ்பைஸ் சினிமாஸ்’ என்றவுடன்..

‘வணக்கம் மேடம் , நாங்க தெறி படத்துக்கு டிக்கெட்டு போட்டுட்டோம். இந்த டிக்கெட்டுகளை எங்கே, எப்படி, எப்போ கிடைக்கும்.?’

‘சாரி , நீங்கள் ப்ரீபுக்கிங் கியூல இருக்கீங்க. படம் ரிலீஸ்க்கு நாலு நாளைக்கு முன்னாடி நாங்க புக்கிங் டிடெய்ல்ஸ் சைட்ல காமிப்போம். அதுல உங்க ஐடி இருந்தா நீங்க தாராளமா படம் பார்க்கலாம்”

“அப்போ நான் பணம் போட்டு டிக்கெட்டு புக் பண்ணேனே. அது வெறும் க்யூவுல நிக்கற மாதிரிதானா?”

“ஆமாம் , ஒருவேளை உங்க டிக்கெட்டு புக்காகலைன்னா உங்க பணம் திரும்ப நாங்க ரீஃபண்ட் பண்ணிடுவோம். வழக்கமான புக்கிங்ல மறுபடியும் புக் பண்ணனும்”

“ஆமாம்.. நீங்க இப்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி எந்தப் படத்துக்கும் டிக்கெட் ப்ரீ புக்கிங் பண்ணதில்லையே... வேதாளம், லிங்கா கூட இந்த லிஸ்ட்ல இல்லியே...”

“இந்த ப்ரீ புக்கிங் நாங்க மூணு மாசமா தான் செஞ்சுட்டு இருக்கோம். இங்க்லீஷ் படங்களுக்கு செய்துட்டு இருந்தோம். இப்போ பெரிய பட்ஜெட் தமிழ் படங்களுக்கும் ஒரு மாசம் முன்னாடி பண்ண ஆரம்பிச்சிருக்கோம். இந்தப் படங்கள் மட்டுமில்லாம இந்தி படங்களும் கூட ப்ரீ புக்கிங் வரிசையில இருக்கு. அதையும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க வேறேதும் டிடெய்ல் வேணுமா?

ஒன்றுமில்லை என்றதும் ‘ஸ்பைஸ் சினிமாஸை தொடர்புக் கொண்டமைக்கு நன்றி’ எனக் கால் கட்டானது.

அப்போ ஒரு வித லக் தான். இன்னும் சொல்லணும்னா ப்ரீ புக்கிங் ஆரம்பித்த உடனேயே நாம டிக்கெட்டுகளை புக் செய்திருந்தால் கண்டிப்பாக டிக்கெட்டுகள் உறுதியாகும் என்பது மட்டும் கண்கூடாகவே தெரிந்தது.

அப்போ நம்ம டிக்கெட்டு புக்காச்சா? இல்லியா?

புக் ஆய்டுச்சு. ஆனா சீட் கெடைக்குமா இல்லையா? ன்னு ‘வேட்பாளர் நேர்காணல்’ல்ல கட்சித்தலைமையைச் சந்திச்சுட்டு வந்து காத்துகிட்டு இருக்கற மாதிரி காத்துட்டிருக்க வேண்டியதுதான்.

அப்போ தெறி டிக்கெட்டு ?

ஹி...ஹி..அது வந்து அந்த டிக்கெட்டு , அது டிக்கெட்டு... 

- ஷாலினி நியூட்டன் -

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close