Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓகே சொன்ன நயன்தாரா...ஹீரோதான் பிரச்னையா?

சிறந்த படமாகவும், சிறந்த நடிகைக்காகவும் என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று கம்பீர நடைப்போட்ட படம் "குயின்". பாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் படமான இப்படத்தின் ரீமேக் தான் இப்போது கோலிவுட்டின் ட்ரெண்ட்.

இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமத்தை மொத்தமாக வைத்திருக்கும் தியாகராஜன் முதலில் தான் இயக்குவதாகவும், ஹீரோவாக பிரசாந்த் நடிப்பதாகவும் முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்படத்தின் மிக முக்கிய அம்சம் நாயகியே.

கங்கனா ரணாவத் அசத்திய நடிப்பில் இங்கே யார் என்ற நிலையில் த்ரிஷா முதல் கோலிவுட்டின் முன்னனி நாயகிகள் அனைவரின் பெயரும் பரீசீலனையில் இருந்தன. நயன்தாராவிடம் கேட்டபோது ஹீரோவாக பிரசாந்த், இயக்குநராக தியாகராஜன் என்றவுடன் சற்றே தயங்கினார். தற்போது ரேவதி இயக்கம், சுகாசினி திரைக்கதை எல்லாவற்றிற்கும் மேல் இந்தியில் நடித்த அதே ராஜ்குமார் ராவோ இங்கே நடிக்கிறார் என்பதால் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்புகள் துவங்கப்பட உள்ளன. கோலிவுட்டில் ஹீரோயின் சார்ந்த கதைகள் என்றாலே நயன்தாரா தான் என்ற நிலையில் குயின் படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close