Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2.0 படத்தில் ஒரேயொரு பாட்டுதானா? என்ன சொல்கிறது தயாரிப்புத் தரப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் 2.0. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படம் 2017ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் இரண்டு வெர்ஷனாக வரும் எனவும் ஒரு படம் ஹாலிவுட் பாணியில் பாடல்கள், மசாலா காட்சிகள் இல்லாமலும், மற்றொன்று ஷங்கருக்கே உரிய அடையாளத்தோடு பிரம்மாண்ட செட்டுகளில் அமைந்த பாடல் காட்சிகளுடன் வரும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தற்போது மற்றொரு செய்தியாக படத்தில் மொத்தமே ஒரு பாடல்தான் என செய்திகள் வெளியாக, அதற்கு பதிலளித்துள்ளார் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜு மகாலிங்கம்.

‘ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஒரு மியூசிக் டைரக்டரை வச்சிக்கிட்டு, ஒரு பாட்டு மட்டும் படத்துல வக்கிற அளவுக்கு நாங்க வெவரம் இல்லாதவங்களா? ஆடியோ ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கேக்குறவங்க ஆடிப்போற அளவுக்கு அத்தனை பாட்டுகள் இருக்கு, இசை வெளியீட்டு விழா லண்டனில் நடக்கும் என அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close