Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடிய விடிய ஷூட்டிங் விடிந்ததும் புதுப்பட பூஜை - அசத்தும் சிம்பு

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலு. இப்படத்தை இயக்கிய விஜய்சந்தருடன் மீண்டும் சிம்பு இணைகிறார். இப்புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

சிம்புவிற்கு அடுத்து வெளியாகவிருக்கும் படம் “இதுநம்மஆளு”. நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்திற்கான விடுபட்ட இரண்டு பாடல்களை படமாக்கும் பணியில் பிஸியாக இருந்தார் சிம்பு.

நேற்றிரவு முதல் அதிகாலைவரை பாடல்காட்சியில் நடித்துக்கொடுத்துவிட்டு, அதிகாலை படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைத்த கையோடு, இன்று காலையிலேயே விஜய்சந்தருடன் அடுத்த படத்திற்கான பூஜையில் ஆஜராகிவிட்டாராம் சிம்பு.

இந்தப் படத்தை, இப்போது அ.தி.மு.க ஆதரவு - தே.மு.தி.க., எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவிருக்கிறார். அ.தி.மு.க-வில் சீட் தரமாட்டார்கள் என்று உறுதியாக நம்பிய மைக்கேல், சிம்புவை நம்பி சினிமாவில் கூட்டணி சேர்ந்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

ஏற்கெனவே 'வாலு"வை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து ரிலீஸ் செய்ய முடியாமல் பரிதவித்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!