Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எட்டு பிரிவுகளில் பாஜிராவ் மஸ்தாணி, பாகுபலிக்கு ஒரே ஒரு இடம்!

சென்ற வருடம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக படத்தில் அனைவரையும் கவர்ந்த விஷயம் படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள்.

மலை, அருவி, அரண்மனை, நாசரின் கைகள், பல்லாலதேவன் காளையை அடக்கும் காட்சி என படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் புகுந்து விளையாடி 2500VFX காட்சிகளை தந்திருந்தது ஆர்கா மீடியா வொர்க்ஸ். இதே போல் 2015ன் இறுதியில் பிரம்மாண்டமான VFX வேலை பாடுகளுடன் பாலிவுட்டில் வெளியான வரலாற்று படம் பாஜிராவ் மஸ்தானி. இப்படத்தில் மொத்தம் 1800VFX காட்சிகள் இடம் பெற்றிருந்தன

இப்படத்தின் பிரமாதமான விஷுவல் எபெக்ட்ஸ் வேலைக்காக சென்ற மாதம் நடைபெற்ற ஜீ சினிமா விருதில், இப்படத்தில் பணியாற்றிய என்ஒய் VFXவாலா குழு சார்பாக பிரசாத் சுதர் விருதினை பெற்றிருந்தார். மார்ச் 17 அன்று சீனாவில் நடந்த ஆசிய திரைப்பட விருதுகளில் இவ்விரு படங்களுமே சிறந்த விஷுவல் எபெக்ட்டுகளுக்காக ஒரே பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதில் பாகுபலி ஒரே ஒரு பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த போது, பாஜிராவ் மஸ்தானி சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் சிறந்த படத்திற்கான விருது உட்பட 8 விருதுகளை தி அஸ்ஸசின் சீன படம் வென்றது. பாஜிராவ் மஸ்தானிக்கு சிறந்த விஷுவலுக்கான விருது கிடைத்துள்ளது. பாகுபலிக்கு விருதுகள் கிடைக்கவில்லை. 

-பிரியாவாசு-

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close