Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”கலாபவன்மணி உடலில் பூச்சி மருந்து” போலீஸ் விசாரணையில் தகவல்!

மலையாள, தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய கலாபவன் மணி, இந்த மாதம் 6ம்தேதி மரணமடைந்தார். அவரது உடலில் அளவுக்கதிகமான மீத்தேல் ஆல்கஹால் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.

கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், மணியின் மரணம் நிச்சயம் சந்தேகத்துக்கிடமானது என்கிறார். ‘எங்களுக்குத் தெரிந்து மணி அண்ணா, பீர் மட்டுமே குடிப்பார். டாக்டர்கள் எங்களிடம் சொன்னது, ‘லைசென்ஸ் பெற்றுள்ள மதுவில் இத்தனை மீத்தேல் ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை’ என்பதே.

எனவே அதற்கு முன்தினம் அவரோடு இருந்த அனைவர்மீதும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது’ என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.  இதை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் தற்போது கலாபன்மணியின் உடல் பரிசோதனையில் பூச்சி மருந்து கலந்து இருந்தது தெரியவந்துள்ளது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்