Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 நடிகர்களுக்கு உணவளித்த ஹன்சிகா

 நடிகர்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 20 அன்று நடந்தது. நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்ற பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால், ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் மிகவும் சுமுகமாக பொதுக்குழு நடந்து முடிந்தது.

இந்தப்பொதுக்குழுவுக்கு நடிகர் நடிகையர் எல்லோரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தாலும், வெளியூர்களில் படப்பிடிப்புகளில் இருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிகழ்வில் சுமார் இரண்டாயிரம்பேர் கலந்துகொண்டார்களாம். அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

அவற்றுக்கான மொத்தச் செலவை நடிகை ஹன்சிகா ஏற்றுக்கொண்டாராம். பொதுக்குழுவுக்கு வரமுடியாவிட்டாலும் தம்முடைய பங்களிப்பாக இந்தச் செலவை ஏற்றுக்கொள்வதாக அவர் சொல்லியிருந்தாராம். அவருக்கு விஷால், கார்த்தி ஆகியோர் நன்றி சொல்லி ஒரு செல்பி வீடியோ அனுப்பியிருந்தார்களாம். அதைப்பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா.    

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close