Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்த்திரையுலகின் முதல் பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார்

1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேலாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன.

பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான்.

இந்தச்  சம்பவம் மூலம் பிஆர்ஓ ஆனவர்தான் பிலிம்நியூஸ் ஆனந்தன். தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட எல்லோருடைய படங்களிலும் பணியாற்றினார். கமல், ரஜினி உள்ளிட்ட எல்லோரும் நிகழ்ச்சிகளில் இவரைப் பார்த்தால் வணங்கத் தவறமாட்டார்கள்.

அப்போதிருந்து திரையுலகத்துக்கெனவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். திரையுலகம் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களை முழுமையாகத் திரட்டியவர் அவர் ஒருவர்தான். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் தமிழ்த்திரைப்பட புள்ளிவிவரம் என்கிற பெயரில் ஒரு சின்ன புத்தகத்தைத் தயாரித்து எல்லோருக்கும் கொடுப்பார். விக்கிபீடியா வருவதற்கு முன்பாக அவருடைய புள்ளிவிவரங்கள் மட்டுமே ஊடகங்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கே உதவியது.

2002 ஆம் ஆண்டு இவருடைய 52 வருட கால உழைப்பில் சேமித்த பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் திரையுலக விவரங்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. அவற்றைக் கண்காட்சியாக வைப்பதாகச் சொன்னார்கள். இன்றுவரை நடக்கவில்லை.

தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள அந்த நடமாடும் தமிழ்சினிமா விக்கிபீடியா தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. தன்னுடைய 88 ஆவது வயதில் இன்று காலை 11 மணியளவில் அவர் மறைந்தார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.