Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் , வேட்டையாடு விளையாடு கதையா?- தெறி டிரெய்லர் விமர்சனம்!

தெறி படத்தின் பாடல்களும், டிரெய்லரும் நேற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெளியான நிலையில் 2 நிமிடம் 2 நொடிகள் ஓடக்கூடிய  டிரெய்லர் இதுவரை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. டீஸர் ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டிரெய்லரும் தற்போது புது வைரல்களை படைக்கக் களமிறங்கிவிட்டது. டீஸரில் விஜய்யின் குரல் எனில் , டிரெய்லரில் குழந்தை நைனிகாவின் குரல்.

மை ஃபாதர் இஸ் ஜோஸெப், மை மதர் இஸ் ஜோஸெப் எனக் குழந்தை நைனிகாவின் போர்ஷன்களுடன் டிரெய்லர் ஆரம்பிக்கிறது.

நமக்குத் தெரிந்து ஒரு மாஸ் ஹீரோவின் பட டிரெய்லரும், டீஸரும் குழந்தைகளை மையமாக வைத்து வெளியானது இதுதான் முதல் முறை எனலாம். விஜய் , குழந்தை நைனிகாவின் பகுதிகளே 60 சதவீதம் டிரெய்லரில் இடம் பிடித்திருப்பதன் மூலம் ஏற்கனவே குழந்தை ரசிகர்கள் அதிகம் கொண்ட விஜய்க்கு இன்னும் அதீத ரசிகர்களை இந்தப்படம் உருவாக்கும் என்பது உறுதி.  குறும்பு எமி ஜாக்சன், செண்டிமெண்ட் சமந்தா இருவரும் ஆங்காங்கே தென்பட்டு டீஸரில் இருந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார்கள். ஆனால் மாஸ் என்ட்ரி என்றால் இயக்குநர் மகேந்திரன் நடிகராக அறிமுகமான காட்சி தான். சினிமா ரசிகர்கள் பலருக்கும் மெய்சிலிர்க்கும் என்றே சொல்லலாம்.

ஜி.வி.யின் பின்னணி எங்கேயோ கேட்ட பாணி தான் என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் பவராகவே இருக்கிறது. சமந்தாவின் காட்சிகள் மீண்டும் ராஜாராணி பட செண்டிமெண்டுகளுக்குக் கொண்டு செல்வதை மறுக்க முடியாது. அதே சமயம் எமி ஜாக்சன் ஹேர் ஸ்டைல் பேச்சு என  ப்ரெஞ்ச் வாசிகளை ஞாபகப்படுத்துகிறது.

டீஸரில் பள்ளி வேன் கவிழ்ந்த அதே இடத்தில் டிரெய்லரில் விஜய் குதிக்கிறார், என்ற ரீதியில் டீஸருக்கும் , டிரெய்லருக்கும் நல்ல லின்க் கொடுத்துள்ளார் எடிட்டர். இருட்டுக்குள் விஜய் மறைந்திருந்து வெளியே வருவது மட்டும் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தாச்சு. பாஸ் கொஞ்சம் மாத்துங்க.

டிரெய்லர் முடிய முடிய பீட்டுகள் ஏறி பாடல் காட்சிகள் வண்ணமயமாகக் கடந்து முடியும் போது சில இடங்களின் லோகேஷன்கள், ராஜா வேடம் என ஷங்கரின் அஸிஸ்டெண்ட் என்பதையும் நிருபித்திருக்கிறார் அட்லீ.

 மீண்டும் தர்மேஷ்வர் ஜம்மு காஷ்மீரில் சார்ஜ் எடுத்துக்கொண்டார் என முடிவதும் விஜய் மொட்டை அடித்த வண்ணம் பைக்கில் செல்வதும் என அது ஒரு விஜய்யின் பெயரா என்ற சந்தேகமும் எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் சமந்தாவுடன் வரும் போலீஸ் விஜய் திருநீறு சகிதமாக அம்மா ராதிகாவுடன் காட்சியளிப்பதும், குழந்தையுடன் வரும் விஜய் ஜோஸெப் குருவில்லா என இன்னொரு பெயரில் வருவதும், கண்டிப்பாக இது முந்தைய சத்ரியன், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் படங்களைப் போல் ஒரே மாதிரியான ஒன்லைனாக இருக்காது என்ற நம்பிக்கை வருகிறது. எனினும் காத்திருப்போம் ஏப்ரல் 14 வரை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close