Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெறி' இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசியிருந்தால்?

'புலி' படத்தில் டி.ஆர் பேசியதை மறப்பதற்குள், விஜய்யின் அடுத்த படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது! 'புலி'க்குப் பேசியதுபோல, 'தெறி'க்கும் டி.ஆர் பன்ச் பேசி, தெறிக்கவிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

நாட்ல தெறிக்கவிடலாம், காட்ல தெறிக்கவிடலாம்.
ஆனால், இந்தத் தெறி...
தெறிக்கவிடும் தெறி, திமிரான தெறி, தெம்பான தெறி,
வெடிக்கும் தெறி, வேட்டையாடும் தெறி, வேலைகாட்டும் தெறி.
இது...

விஜய்யின் தெறி, விசிலடிக்கும் தெறி, விறுவிறுப்பான தெறி,
வேடிக்கை காட்டும் தெறி, வெடிக்கும் தெறி... இந்தத் தெறி, வெடியின் திரி!

இது... கலைத் தெறி, இது... கலக்கல் தெறி, இது... கருத்துத் தெறி.
இது... செம்மையான தெறி, சென்னைவெள்ளத் தெறி, செமத்தியான தெறி.
இது... கருமையான தெறி, கலக்கலான தெறி, காஸ்ட்லியான தெறி!
இது...

சுளுக்கெடுக்கும் தெறி, சூடான தெறி, சூப்பரான தெறி,
சுறுசுறுப்பான தெறி!

இது டண்டணக்கா தெறி, இது டணக்குனக்கா தெறி,  இது தில்லான தெறி, தில்வாலே தெறி!

இது.. சாதாரண தெறியல்ல, சரித்திரம் படைக்கும் தெறி.
சகுனம் பார்க்கும் தெறியல்ல, சாதனை படைக்கும் தெறி.
இந்தத் தெறி,
ரணகளத் தெறி, ரகமான தெறி, ராட்ஸஸத் தெறி!
ரவுத்திரத் தெறி!

- மு.சா.கெளதமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close