Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷின் அடுத்த ரிலீஸ் ரயிலா? கொடியா?

  தனுஷ் இப்போது கௌதம் இயக்கும் எனைநோக்கிப்பாயும்தோட்டா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ரயில் மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் கொடி ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.

 

அவ்விரு படங்களிலும் படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ரயில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதற்குப் பிறகு கொடி படத்துக்கு வந்த தனுஷ் அதையும் முடித்துவிட்டார்.

ஆனாலும் ரயில் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. கும்கி, கயல் ஆகிய படங்களைப் போல ரயில் படத்திலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதாகவும் அதனால் அந்தப்படத்தின் வேலைகள் முடியாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரயிலுக்கு அடுத்து எடுக்கப்பட்ட கொடி படத்தின் வேலைகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது முதலில் எந்தப்படத்தை வெளியிடுவது என்கிற போட்டி உருவாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ரயில் படத்தின் வேலைகள் தாமதமாவதால் கொடியை முதலில் வெளியிட்டுவிடலாம் என்று அப்படக்குழுவினர் வேகமாக வேலை செய்துக்கொண்டிருக்கிறார்களாம்.

எனவே தமிழகச்சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு கொடியை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்குள் ரயில் வேலைகளும் முடிந்து படம் தயாராகிவிட்டால் முதலில் எது என்கிற போட்டி உருவாகிவிடும் என்கிறார்கள்.  

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close