Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புற்றுநோய் சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட நடிகர்கள்

இன்று புற்று நோயால் மரணமடைந்த  மலையாள நடிகர் ஜிஷ்ணு ராகவன், மரணப் படுக்கையில் இருந்த போதும் மற்றவர்களின் மனது நோகாமல் வாழ்ந்துள்ளார்.

''நான் இப்போது ஐசியுவில் இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது வீடாக மருத்துவமனை மாறியிருப்பதை குறித்து  நான் கவலைப்படவில்லை.டாக்டர் வரும்போது நான் தூங்கி கொண்டிருந்தேன்.அவர் வந்த போது எழும்பி புன்னகை செய்தேன். அவரும் என்னை பார்த்து சிரித்தார். அவர் என்னை பார்த்து, ஒரு நோயாளியாக இருந்து சிரிப்பது நல்லது என்றார். அது அவர்கள் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க, நமக்கு சக்தியை கொடுக்கிறது. செவிலியர்கள்  என்னை கவனிக்க வரும் போதும் மகிழ்ச்சியாகச் சிரித்தேன். நம்புங்கள். அது அதிக வித்தியாசத்தை கொடுத்தது. மருத்துவர்கள் , ஐசியுவில்  கடினமான வேலையை செய்கிறார்கள். நான் சிரிப்பது, சூழலை நல்ல முறையில் மாற்றுகிறது. இது ஒரு மேஜிக். சிரிப்பது ஒரு மேஜிக். ஒவ்வொருவருக்கும் இது தெரியும். ஆனால் எப்படியோ அதனை மறந்துவிடுகிறார்கள். எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன் என ஆங்கிலத்தில்  குறிப்பிட்டுள்ளார்!'' இது தனது பேஸ்புக் பக்கத்தில் ராகவன் கடைசியாக எழுதியிருந்த பதிவு.

வாழ்வில் இக்கட்டான நிலையிலும் மற்றவர்களின் வலியை உணர்ந்து வாழ்ந்த ராகவன் மறைவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களின் கதைகளும் சினிமாவில் ஏராளம்!

நடிகை கெளதமி : 80-களின் முன்னணி நடிகையான இவருக்கு 35 வயதில் புற்றுநோய் தாக்கியது. தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்றார். பிறகு, குணமடைந்து வந்து, மீண்டும் திரைப்படங்கள், சீரியல் என பிஸியாக இருக்கிறார். தவிர, தன்னைப்போல மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும், அவர்களைக் காப்பாற்றவும் 'மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக' அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, நடத்திக்கொண்டிருக்கிறார்.


இன்னோசென்ட் : மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யாகவும் இருப்பவர் இன்னோசென்ட். புற்றுநோய் இருப்பது உறுதியானபிறகும், உற்சாகமாக வலம் வந்தவர். புற்றுநோயில் இருந்து மீண்டபிறகு, தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, 'புற்றுநோய் வார்டுக்குள் சிரிப்பு' என்ற தனது அனுபவத்தைப் புத்தகமாவும் எழுதியிருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஊக்கமளிக்கும் விதமாக இருக்குமாம்.

மம்தா மோகன்தாஸ் : பாடகியும், திரைப்பட நடிகையுமான இவர், இருமுறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். ''எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் வாழவேண்டும் என்ற நம்பிக்கையும், தைரியமும் இருந்தால் போதும்!'' என்பதுதான் மம்தா சொல்லும் மந்திரம்.

கொல்லம் துளசி : 1970ல் அரசுப் பணிக்காக கோழிக்கோடு மாநகராட்சியில் சேர்ந்தவர், நடிப்பின் மீதான ஆர்வத்தில்  1986ம் ஆண்டில் இருந்து சினிமாவிற்கு வந்தார். சில தமிழ்ப்படங்களில் தலைகாட்டியிருக்கிறார். இவரும் கேன்சரில் இருந்து மீண்டவர்தான்!

புற்றுநோயால் இறந்துபோனவர்களுக்காக வருந்தும் அதேசமயம், புற்றுநோய் தந்த சவாலை துணிச்சலாகச் சந்தித்து, வென்ற சக நடிகர்களுக்கு ஒரு சல்யூட்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.