Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொழும்பில் இசைநிகழ்ச்சி நடத்துவதா? - ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிர்ப்பு

 ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கிறதாம். ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அந்நிகழ்ச்சி நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி நடந்ததில்லை, எனவே இந்த இசைநிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள் என்று விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்னஆசை பாடல் மற்றும் அது உருவான விதம் ஆகியனவற்றைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கு அப்படி விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிற அதேநேரம் சென்னையில், கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்து முருகசேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அவற்றில், உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரத்தக்கறைபடிந்த சிங்களஅரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close