Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கின்னஸில் இடம்பிடித்தார் குரலரசி சுசிலா!

இந்தியாவின் முன்னணி பாடகியான பி.சுசீலாவின் குரலை பிடிக்காத மக்களே இருக்கமுடியாது. 1950ம் ஆண்டு சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் துவங்கினார். தொடர்ந்து ஆலயமணியின் ஓசை (பாலும் பழமும்), முத்தான முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயம்), பருவம் எனது (ஆயிரத்தில் ஒருவன்), சிட்டுக் குருவி (புதியபறவை) என பல படங்களில் பாடி அனைவரின் மத்தியிலும் தனக்கென ஓரிடம் பிடித்தார்.

ஐந்துமுறை சிறந்த பாடகி விருது, பத்ம பூஷன் , கலைமாமணி விருது என பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான சுசீலா இப்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார், அதிகமான பாடல்கள் பாடியவராக கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1960 முதல் இப்போது வரையென கணக்கெடுத்ததில் 17, 695 பாடல்கள் பாடியிருக்கிறார். இதனால், அதிகப் பாடல்கள் பாடியவர் என்பதற்காக கின்னஸ் சான்றிதழ் கிடைத்துள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்