Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை கிண்டல் செய்கிற அளவுக்கு வளரவில்லை - சரண்டரான இயக்குநர்

மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் என்கிற காம்பினேஷனில் உருவாகிவரும் படம்  ‘அட்ரா மச்சான் விசிலு’. கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தை லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடுகேட்ட விநியோகஸ்தர்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என்றும்,. ‘லிங்கா’ பட சர்ச்சையை மையமாக வைத்தே  இந்தப் படம் தயாராவதாகவும் செய்திகள் பரவின. இதில் ரஜினியை அவமதிப்பது போன்று காட்சிகள் இடம் பெறுவதாகவும் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. அவரை வைத்து ரஜினியை கேலி செய்யும் காட்சிகளை எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.அதோடு, படவிளம்பரங்களில், பவர்ஸ்டார் சீனிவாசனோடு எம்.ஜி.ஆர் இருப்பது போன்ற காட்சிக்கும் நிறைய அதிருப்திகள் வந்தன.

இந்தச் சர்ச்சைகள் குறித்து, படத்தின் இயக்குநர் திரைவண்ணன் விளக்கமளித்துள்ளார். பர்ஸ்ட்லுக் போஸ்டர்ல பவர்ஸ்டாருக்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுக்கிற மாதிரி வச்சிருக்கீங்களே.. ஏன்?

“எம்.ஜி.ஆரை மத்த எல்லாரும் பார்க்கிறத விட நாங்க பார்க்கிற பாய்ன்ட் ஆப் வியூ வேற.. முதல்ல எம்.ஜி.ஆர் அவர்களை  சினிமாக்கரராத்தான் பார்க்கணும்.. அப்புறம்தான் சி.எம் மா பார்க்கணும். நாங்க அவரை ஒரு சினிமா கலைஞரா நினைச்சுத்தான் இந்த போஸ்டரை உருவாக்கினோமே தவிர இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல”.
 
ரஜினியை கிண்டல் பண்ற படம்னு வேற சொல்றாங்களே..?

 
“வெளியில சொல்றாங்க தான். ஆனா நிச்சயமா அப்படி எதுவும் இதுல  இல்ல.. நாங்களும் சினிமாக்காரங்கதான்.. எங்களுக்கு எல்லாரும் வேணும்.. தவிர சூப்பர்ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் வளரலை. இது யாரையும் காயப்படுத்தாத படமா இருக்கும்.. படம் வந்ததும் உங்களுக்கே உண்மை என்னனு புரியும்”.
 
லிங்கா விவகாரத்தில் ரஜினிக்கெதிரான விநியோகஸ்தர்கள் தான் இந்தப்படத்தை தயாரிச்சு இருக்காங்கன்னு சொல்லப்படுதே..?

 
“இல்லவே இல்லை.. அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை கோபின்னு ஒரு தயாரிப்பாளர்தான் தயாரிச்சிருக்கார்”. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close