Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரசிகர்களைக் கொள்ளை கொண்ட சன் டிவியின் நட்சத்திர சங்கமம்! நிகழ்ச்சி விமர்சனம்!

ப்ரல் 3 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழர்களும் கண்டுகளித்த நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் தெறி படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவைத் தாண்டி மக்களை ஈர்த்த இந்நிகழ்ச்சி பற்றிய ஓர் அலசல்.

ஏப்ரல் 17ம் நாள் மிகவும் முக்கியமான நாள் என கார்த்தி ஆரம்பமே நமக்கு எதிர்ப்பார்ப்பை உண்டாக்க பயந்த கோவை சரளாவும், அவரைக் கலாய்த்த மனோபாலாவும் நம்மை ஜாலி மூடிற்குக் கொண்டு வந்தனர்.

“இனி செயலில் செய்யப் போகிறோம்” என ரோகினி கொஞ்சம் சுறுசுறுப்பாக பேச அடுத்து சுஹாசினி, ராதா , விஷால் என பேசி முடித்தபின்,  ஜாலியாக மைக்கை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் வடிவேலு. நீங்க இல்லாம நாங்க இல்ல” என நிறுத்திவிட்டு மறுபடியும் நீங்க இல்லாம நாங்க இல்ல, என்றார்... ஏன்னா நாங்க இல்லாம நீங்க இல்லைன்னு சொல்ல முடியாது. உங்கள் ஆதரவுகள் தேவை என நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

”ஓல்ட் ஈஸ் கோல்ட்”

”லவ் பேர்ட்ஸ் ...லவ் பேர்ட்ஸ்” பாடல் ஒலிக்க கன்னடத்துப் பைங்கிளி என்ட்ரி என மனம் சொல்லியது...சரி ஒரே நடிகரோட நிறையப்  படங்கள்ல நடிச்சீங்களே உங்க கிட்ட கேக்கலையா என்ன நீ அவரு கூடயே நிறைய படங்கள் நடிக்கிறேன்னு இப்படி ஒரு கேள்வியை சுஹாசினி, சரோஜா தேவியிடம் வைக்க, நான் எத்தனை ஹீரோ நடித்தாலும் அவரவருக்குத் தகுந்த படி நடிப்பேன்” ஆனால் எல்லா நடிகர்களும் உங்க கால்ஷீட்டுக்கு காத்திருந்தாங்க அப்படிதானே என்றதும் வெக்கப்பட்டு சிரித்தார் சரோஜாதேவி. உடனே கரகோஷங்கள் எழுந்தன. இப்படி நிகழ்ச்சி முழுவதும் ஃப்ளாஷ்பேக், கிளாஸிக் திருவிழாவாகவே இருந்தன.

ராஜேஷ் புதியபறவை க்ளைமாக்ஸ் டயலாக்கை சிவாஜி ஸ்டைலில் பேச, சரோஜா தேவி அப்படியே கோபால் என அழைத்து வசனத்தை முடிக்க நமக்கே கை தட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை...

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை அனுபவங்களை படபடப்பும், நெகிழ்ச்சிகளுடனும் ராதா சொல்ல, அவை , அட என டைரிகளில் குறித்துக்கொள்ளும் விஷயங்களாகவே இருந்தன.

 பப்பாளிப் பழமே என நூற்றிமுப்பது படங்களுக்கு மேல் ஒரே நடிகருடன் நடித்து கின்னஸ் ரெக்கார்ட் அடித்த ஷீலாவை மேடைக்கு அழைத்து “ என்னம்மா ஒண்ணு ரெண்டு படங்கள்ல சேர்ந்து நடிச்சாலே கிசுகிசு கிளப்பிடுவாங்க, கெமிஸ்ட்ரின்னு பரப்பிடுவாங்க” நீங்க எப்படி தப்பிச்சீங்க என்றதும், சிறிதும் யோசிக்காமல் “ நாங்கள் சினிமாவை சினிமாவாகப் பார்த்தோம், வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை” எனக் கூற இது தான் இன்னைக்கு தலை முறைகளுக்குத் தேவையான விஷயம் என சுஹாசினி ஊக்குவிக்க 130 படங்களா என கண்கள் விரியாத ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

கங்கையின் சங்கமம் சிறுகதை ஒன்று ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதியிருந்தேன், அந்தக் கதைக்கு சிவகுமார் படம் வரைந்தார் எனப் பழைய நினைவைப் பகிர நமக்கும் அந்த சிறுகைதையைப் படிக்க வேண்டும் என தோன்றவே விகடன் பொக்கிஷங்களைப் புரட்டினோம்...

கங்கையில் சங்கமம் சிறுகதையைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:  http://bit.ly/1UCTygo 

ஸ்கூலில் பரீட்சைக்கு ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்து நின்னா எனக்கு தேன் சிந்துதேனு முதல் பாட்டே ரொமாண்டிக் பாட்டு. என ஜெயசித்ரா தனது ஃப்ளாஷ்பேக் சொன்னார். இப்படி நிகழ்ச்சி முழுவதும் நடிகைகள் , நடிகர்களின் ஃப்ளாஷ் பேக் கதைகள் இன்றைய நடிகர்களுக்கும், பார்வையாளர்களான நமக்கும் ஆச்சர்யமாகவே அமைந்தன. இடையிடையே நடிகர்களின் வருகையும், ஆடல்களும், பாடல்களும் என இளைஞர்களைக் கட்டிப்போட்டதை மறுக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் கேரவன் என்ற வசதியே இல்லாமல் மரத்தடிகளிலும், ஒதுக்குப் புறங்களிலும் தான் உடை மாற்றுவோம் என கூறிய அக்கால நடிகர் நடிகைகளின் சவால்கள் எப்படி இருந்திருக்கும். இப்படி எதுவுமின்றியே நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் என இணைய விஷமிகள் இப்போது விளையாட்டைக் காட்டுகிறார்கள் இப்போதும் அதே நிலை எனில் என்னென்ன செய்வார்கள் என்று நினைக்கையில் சற்று பயமாகத் தான் இருந்தது....

”காமெடி சரவெடி”

மாடர்ன் கண்ணகியாக வேணும்னா நான் பேசுறேன் என பீட்சாவுடன் வந்து கோவை சரளாவும், மனோபாலாவும் உன்னுடையது சைவம், என்னுடையது அசைவம்னு சொல்ல அரங்கம் அதிர்ந்தது... கிளாசிக் கலக்கலாக இருந்த நிகழ்ச்சியின் திடீர் விருந்தாக மேடையேறிய வடிவேலு எட்டணா இருந்தா பாடல் ஒலிக்க ஏறியவர் “ஏதோ அம்மன் கோவில்ல இருக்க மாதிரியே இருக்கு என்றவர் ஒவ்வொருவர் காலிலும் விழ கோவை சரளா காலைக் காட்ட விடுத்தா விழறேன் என்றவுடன் எதுக்கு காலை வாறவா என்றார். அவருக்கே உரிய வெங்கலக் குரலில் சில பாடல்களைப் பாட இடையில் மனோபாலா கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்க்க என மொத்த நிகழ்ச்சியின் வெற்றியையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார் வடிவேலு என்று சொல்லலாம். மிஸ் யூ வடிவேலு.

இந்த நிகழ்ச்சி பற்றி ஒருவரியில் சொன்னால், நம் வீட்டுப் பெரியவர்கள் கண்டிப்பாக ரிமோட் கிடையாது பாணியில் தான் இருந்திருப்பார்கள்.

இன்னும் எதிர்பார்க்கிறோம்!

என்னதான் புது ட்ரெண்டுன்னாலும் ஓல்ட் ஈஸ் எப்பவுமே கோல்ட் தான் பாணியில் சில தொழில் நுட்ப சவால்களையும். இயக்குநர்களின் அனுபவங்களையும் கூட பகிர்ந்தால் இன்றைய சினிமா வாசிகளுக்கும் உதவிகரமாக இருக்கும். வரும் வாரங்களில் நிறைவேறுமா பார்க்கலாம்?

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close