Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெறி விநியோகஉரிமையை வாங்கிய பிரபலஇயக்குநர்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் வியாபாரம் இதுவரை விஜய் படங்களின் வியாபாரத்தைவிடப் பன்மடங்கு அதிக விலைக்குப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியும் பெரிய விலைக்குப் போயிருக்கிறதென்றும் குறிப்பாக மதுரை மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மதுரை பகுதியில் தெறி படத்தின் விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. உரிமையை வாங்கிவிட்டார் என்று உறுதிபடச் சொல்கிறார்கள் அதேசமயம், மதுரை பகுதி உரிமையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது, இன்னும் கையெழுத்தாகவில்லை என்று சொல்வோரும் உண்டு.

மதுரையில் உள்ள ஒரு பெரிய திரையரங்கின் உரிமையாளரின் துணையோடு அமீர் இந்த விநியோக உரிமையை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். பெரியவிலை பெரியவிலை என்று சொல்லுகிறீர்களே அது எவ்வளவு? என்றைக்கு உண்மையான தொகையை சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொல்லியிருக்கிறார்கள். சுமார் ஏழரைக்கோடிக்கு உரிமை கைமாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close