Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜித் வருவாரா? - பொன்வண்ணன் பதில்!

300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்கப் பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன் ? . விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்குக் கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல .. . இதைப் புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்கக் கடனை அடையுங்கள் கட்டிடம் கட்டுங்கள் .... தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று தான் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை புறக்கனிக்கின்றார் ..

ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கணிக்க மக்களாகிய நாம் ஏன் அந்த கொள்ளையை புறக்கணிக்கக் கூடாது.. ஆம் யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியைக் காணவேண்டாம் ரஜினி கமல்ஹாசன் விஜய் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது?. . இதை இப்பவே தடுத்தால்தான் அவர்கள் அடுத்து கக்கூஸ் கட்டுவதற்கெல்லாம் நம்மை நாட மாட்டார்கள் .. 100 ரூபாய் கொடுத்து படம் தான் பார்க்க முடியும் ரசிகனால் ... . சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது ?? . சிந்தியுங்கள் இந்த கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் ..

இப்படி ஊருக்குள் ஒரு குரல் உருவாகி முகநூல், வாட்ஸப் என கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது என நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் கேட்டபோது 

அஜித் புறக்கணிக்கிறாரா, அல்லது, அவர் கருத்து இதெல்லாம் நீங்கள் தலைவரிடம் தான் கேட்க வேண்டும். மேலும் இது ஒரு தனி நபர் விஷயம் நாம் தலையிட முடியாது. ஆனால் கட்டிடத்துக்கு, ஆனால் நடிகர் சங்கம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும், பணம் வசூலித்து சில நல்ல காரியங்கள் செய்வதும் காலம் காலமாக நடப்பது தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் என பல ஜாம்பாவான்கள் முதல் இப்போது வரை இந்த வழக்கம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இன்னும் சொன்னால் இது ஒரு பொழுதுபோக்குத் துறை, அரசாங்கமே வரிகளுடன் தானே டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறார்கள். அதே சமயம் எங்கள் சொந்த செலவிற்காக இங்கே நிகழ்ச்சிகள் நடத்தவில்லை.

சென்னை வெள்ளம் சமயத்தில் நடிகர் சங்கம் ஒன்றிணைந்து பல உதவிகள் செய்தோம், நடிகர்கள் பலரும் ஆர்வமாக பணமாகவும், பொருளாகவும் கொடுத்தோமே, குஜராத் பூகம்பம், என மக்களின் நலன்களுக்காகவும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பணம் வசூல் செய்து உதவியுள்ளோம். இங்கேயும் நலிந்த கலைஞர்கள் , கஷ்டப்படும் கலைஞர்கள் இருக்கிறார்கள், மக்களுக்காக எங்களால் முடிந்த ஒரு சந்தோஷத்தைக் கொடுத்து அதில் வரும் பணம் மேலும் நடிகர்கள் பலரும் கொடுக்கும் பணம் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்தே இங்கே கட்டிடம் கட்டவும், பிரச்னைகளைத் தீர்க்கவும், மேலும் சில நலிந்த கலைஞர்களின் துயர் துடைக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அப்போது வெறும் கலை நிகழ்ச்சிகள் மட்டும் செய்யப்பட்டன இப்போது கொஞ்சம் இளைஞர்கள் சேர்ந்திருப்பதால் கிரிக்கெட் என கொஞ்சம் மாற்றமும் நடந்தேறியுள்ளது என்றார்.

 ஆறு வீரர்கள் எட்டு கேப்டன்கள் ஒன்பது கோடி - நட்சத்திர கிரிக்கெட் முழுவிவரத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்

உண்மையும் அதுவே காலம் காலமாக கலை நிகழ்ச்சிகளாக நடத்தி வந்த நடிகர்கள் இப்போது இளைஞர்களைக் கவரும் விதமாக கொஞ்சம் விளையாட்டுப் போட்டிகளாக நடத்துகிறார்கள். அவர்கள் நடித்த படத்தைக் காணவும், கலை நிகழ்ச்சிகளைக் காணவும் கூட்டமாகப் போவது போல் கிரிக்கெட்டும் அந்த வகையில் தான் நடத்தப்படுகிறது. இங்கே ஒரு விஷயம் நாம் நினைத்து சந்தோஷப் பட வேண்டும் கலை நிகழ்ச்சிகளில் கூட ஹீரோயின்கள் நடனம் , கவர்ச்சி என இருக்கும். அதை மாற்றியிருப்பதற்கே பாராட்ட வேண்டும்.

- ஷாலினி நியூட்டன் - 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்