Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் படத்தோடு போய்விட்டு விஜய் படத்தில் திரும்பவரும் பிரபுதேவா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்துவரும் படத்திற்கான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா தமிழில் நடித்து 2004ல் வெளியான படம் “எங்கள் அண்ணா”. விஜயகாந்த், பிரபுதேவா, வடிவேலு, நமீதா உள்ளிட்ட பலர் நடித்த இப்படமே பிரபுதேவாவின் தமிழில் கடைசிப் படம். அதைத்தொடர்ந்து படத் தயாரிப்பிலும், இயக்கத்திலும் பிஸியாகிவிட்டார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக அவதாரமெடுத்திருக்கிறார் பிரபுதேவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்துவருகிறார். நீண்டநாட்களாக பெயரிடப்படாமல் இருந்து, தற்பொழுது “காந்தா” என்று பெயரிட்டுள்ளனர்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சோனு சூட் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, திகில் படமாக உருவாகிவருகிறது. ஏப்ரல் இறுதியில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவிருக்கிறது படக்குழு. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் உருவாகிவருவதாகவும் சொல்லப்படுகிறது.

வினோதன், போகன் படங்களுடன் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரே நேரத்தில் தமிழில் மூன்று படங்களைத் தயாரித்துவருகிறார் பிரபுதேவா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close