Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூர்யா ஜோதிகா வரிசையில் அடுத்த நட்சத்திர ஜோடி

 நட்சத்திர காதல் ஜோடியான பாபிசிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபிசிம்ஹா, கலையரசன், ரேஷ்மிமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது உறுமீன். இப்படப்பிடிப்பின் போது நட்பாகி, காதலில் முடிந்திருக்கும் சிம்ஹா - ரேஷ்மிமேனனின் நிச்சயதார்த்தம் கடந்த வருட நவம்பர் 8ம் தேதி நடந்தது. திருமணம் வருகிற ஏப்ரல் 22ம் தேதி திருப்பதியில்  நடைபெறுகிறது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி மாலை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. திருமண வரவேற்பில் கலந்து கொள்ள தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் பாபி சிம்ஹா அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

திருமணத்திற்குப் பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாபி சிம்ஹாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை கவனிக்க இருக்கிறாராம். பாபி சிம்ஹா 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தை தற்போது சொந்தமாகத் தயாரித்து வருகிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.