Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கங்கைஅமரன் இப்படிப் பேசலாமா?

 

 புதுநடிகர் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் 'என்னமா கதவுடுறானுங்க'. அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான் சிஸ்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாடல்களை , இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டார் .மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டில்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கங்கை அமரன் பேசும் போது. '''என்னமா கதவுடுறானுங்க'.

படத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய்ஆனந்த் எங்கள் அக்கா மகன். எங்கள் குடும்ப இசையில் பிரிந்த இழை எனலாம். இவன் நான் அடித்து வளர்ந்த பிள்ளை .'மாமன்காரன் இருந்தால் மச்சு ஏறலாம் 'என்பார்கள். இவனுக்கு நான் எல்லாமுமாக இருந்தேன். அந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதைவிட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு ஆலமரத்தில் 6 பேர் தூக்குப் போட்டு செத்தார்கள். அப்படி அதையும் காட்டிப் பயமுறுத்திய போதும் நான் அதில் ஏறி பாட்டெல்லாம் எழுதினேன் அப்படி எழுதியதுதான் 'வைகறையில்.. வைகைக் கரையில்' 'அந்தப் புரத்தில் ஒரு மகராணி ' போன்ற பாடல்கள். பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய் , கற்பனைதான் பேய் . எண்ணம்தான் பேய் .

இருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள் இன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது. சாதாரணமாக 'நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என்பவர்கள் மேடையேறி விட்டால்'நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என்றுபயங்கரமாகக் கத்தி பேயாய் பயமுறுத்துகிறார்கள். எல்லாருக்குள்ளும் வேகம்என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது. ஆசைதான் பேய் .எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது. விட்டலாச்சாரியார் கூட பேய்ப்படம் எடுத்தார். நம்பினோம் ஜெயமாலினி ,ஜோதிட்சுமி போன்ற அழகான பேய்களைக் காட்டி ரசிக்க வைத்தார். நான் தேசிய விருதுக் குழுவில் பொறுப்பில் இருந்தேன் .என் சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். அப்படி என்றால் இளையராஜாவுக்கு தேசிய விருது என்றால் ஆண்டு தோறும் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தேசியவிருதுக் குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை. நான் தேசிய விருதுக் குழுவில் குஜராத், மராத்தி, இந்திப் படங்களை எல்லாம் ஏராளம் பார்த்தேன். அவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல் எடுத்த பல படங்கள் விருதும் பெறுகின்றன. நாம் தேசியஅளவில், உலக அளவில் படம் எடுக்க சிந்தனையில் இன்னும் மேம்படவேண்டும் .

வாழ்க்கையைப் படங்களில் சொல்ல வேண்டும்.வாழ்க்கையைச் சொன்ன படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'விசாரணை' க்கு விருது என்றதும் யாரும் எதுவும் கேள்விகேட்கவில்லை. எல்லா மொழிக்காரர்களும் பாராட்டினார்கள் என்று பேசிவிட்டுக் கடைசியாக, இந்த 'என்னமா கதவுடுறானுங்க'. படத்தின் பாடல்கள் பார்த்தேன்.பாடல்காட்சியில் கதாநாயகி இடுப்பில் ஒரு மச்சம் இருந்தது பார்த்தேன் அது என்ன மச்சம் ? இயற்கையா செயற்கையா என்று சொல்லுங்கள். " என்று கேட்டார். கலகலப்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்துவதற்காக இப்படிப் பேசினார் என்று சொல்லப்பட்டாலும், நல்ல விசயங்களைப் பேசிவிட்டு கடைசியாக இப்படிப் பேசலாமா? என்றும் சிலர் கேள்வி கேட்டதை அரங்கில் கேட்க நேர்ந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.