Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு டிக்கெட் 420 ரூபாய், இப்படி இருந்தா எப்படி படம் பாக்குறது? ஒரு சாமானியனின் புலம்பல்!

இந்த வார இறுதி, ஒரு பத்துப் படங்களின் வரவுகளோடு துவங்கிவிட்டது...இதில், நண்பர்கள் முதல் பக்கத்து வீட்டு பார்த்தா அங்கிள் வரை, தி ஜங்கிள் புக் பாரு என்னா விஷுவல், என்னா மேக்கிங் என நம் ஆறாம் அறிவைத் தூண்டினார்கள்...

சரி டிக்கெட்டைப் போடுவோம் என சிஸ்டமை ஓப்பன் செய்தபோது ஆமா தனியா போய் படம் பார்க்க முடியாதே என ஆருயிர் நண்பனையும்

‘டேய்! மச்சி ஜங்கிள் புக் படம் வரியா என்றேன்...

சிரிச்ச வாயனாக , நீயே டிக்கெட்டு போட்ரு மச்சி ... டேய் ஐமேக்ஸ்ல செமையா இருக்காம்... என் ஃப்ரெண்டு போய்ட்டு வந்தான்... ஆனா டிக்கெட்டு 420 ரூபாடா...

டேய் என்னடா ஒளர்ற , ரெண்டு டிக்கெட்டு 300 ரூவா தான டா... 120+120 டாக்ஸ் 60 ..300 தான் எதுக்கு 420 என்றேன்...

டேய் நான் சொன்னது ஒரு டிக்கெட்டு 420 ரூவாடா....

என்னாது?... அடேய்! என்னடா சொல்ற...

ஆமா மச்சி 360 ரூபா டிக்கெட்டு,... 30 ரூபா  3டி கண்ணாடி 30டாக்ஸ் ஆக மொத்தம் 420 ரூவா... சியர்ஸ்.

சியர்ஸா? 420 + 420 = 840ன்னு சொல்லு பக்கி... அப்பறம் பீனிக்ஸ் மால் பார்க்கிங் ஒரு 300, அங்க சும்மா வேற படம் பார்க்க மாட்டோம்.. ஸ்னாக்ஸ் ஒரு 300 மொத்தம் ..டேய்! எப்பா அடேய் குத்து மதிப்பா போட்டாக் கூட 1500 நெருங்குதுடா...

ஆமாம் ... டேய் ஒண்ணு புரிஞ்சுக்க 10mb போட்டோவ 250kb யா பாத்தா நல்லா இருக்குமா... ஐமேக்ஸோட ஸ்பெஷல் 10mb போட்டோவ அப்படியே பார்க்கற கிளாரிட்டி மச்சி...

எனக்கு இந்த மாசம் பட்ஜெட்ட நினைச்சா தான் கிளாரிட்டியா ஒரு பிளானும் சிக்கலடா?

மச்சி மாசா, மாசம் தான் மாச பட்ஜெட் வருது... ஆனா ஜங்கிள் புக் வாழ்க்கைல ஒரு தடவ தான மச்சி...

ஹைய்யோ இவன் வேற குழப்புறானே... சரி ’தெறி’ படம் வருது அதுக்கு நீ டிக்கெட்டு போட்ரு”

அவனை பழி வாங்குவதாக நினைத்து தெறி படத்திற்கு டிக்கெட்டு போடச் சொன்னால் எப்படிப் பார்த்தாலும் அவன் பட்ஜெட் 500 தான்... நான் தான் சிக்கினேன்...

டிக்கெட்டும் போட்டாகி விட்டது.. 840 உங்கள் கணக்கிலிருந்து லவட்டியாச்சு என மெஸேஜைப் பார்த்த போது சற்று கலக்கமாகவே இருந்தது.

இருந்தாலும் பரவாயில்ல அவன் சொன்ன மாதிரி வாழ்க்கைல ஒரு தடவ தான் ஜங்கிள் புக்... அது சரி ரெண்டு பேருக்கே 840ன்னா... ஒரு அஞ்சு பேரு போகணும்னா 4500 ரூபாயா? என்னதான் டெக்னாலஜி, குவாலிட்டின்னாலும் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா? என மற்ற ஊர்களின் டிக்கெட் விலை என்ன என நினைத்து தேடினால் பேரிடியாக இருந்தது...

ஒரு டிக்கெட் 530 மட்டுமே, அடுத்த தளத்தில் 730 மட்டுமே எனத் தூக்கி வாரிப் போட்டது... அப்பாடா! பக்கத்து ஊர்க் காரன் நம்மள விட 100 ரூபாய் அதிகமாதான் செலவு செய்றான் என மன அமைதியுடன் பரவாயில்ல வாழ்க்கைல ஒரு தடவதான ஜங்கிள் புக் படம்... என மனம் சொல்லியது...

என்ன பட்ஜெட்ல தான் துண்டு இல்ல பெரிய வேட்டியே விழும்... 

- சினிமா ரசிகன் -

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close